என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சிறப்பு பூஜை
நீங்கள் தேடியது "சிறப்பு பூஜை"
- கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடைப்பெற்றது.
- சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் மாத கார்த்திகை சிறப்புப் பூஜை நடைபெற்றது.
இதனையொட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைப்பெற்றது.
பிறகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார்.இவ்விழாவில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் 3 நாட்கள் நடந்த சமாதி நூற்றாண்டு சிறப்பு பூஜையின்போது 5 கோடியே 97 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். #Saibabatemple #Saibabasamadhicentenary
மும்பை:
மராட்டிய மாநிலம் சீரடியில் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. இங்கு திரளான பக்தர்கள் வந்து சாய்பாபா அருள் பெற்று செல்வது வழக்கம்.
இதற்கிடையே, சீரடி சாய்பாபா சமாதி நிலையை அடைந்த நூற்றாண்டு விழா இந்த ஆண்டு சீரடியில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கடந்த 17-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரையிலான மூன்று நாட்களில் நடைபெற்ற பூஜையின்போது உண்டியல் வருமானமாக 2.52 கோடி ரூபாயும், ஆன்லைன் முன்பதிவு உள்பட பல்வேறு கவுன்ட்டர்களில் ரசீது விற்பனை மூலமாக சுமார் 83 லட்சம் ரூபாயும் வசூலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலமாகவும் காசோலை, கேட்போலை மூலமாக ரூ.1.41 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. இதுதவிர அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா கோயில் மூலம் ரூ.1.46 கோடி ரொக்க நன்கொடை கிடைத்தது.
மேலும், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளாக ரூ.28.24 லட்சம், வெளிநாட்டுப் பணமாக ரூ.24.55 லட்சம், கட்டண தரிசனம் மூலம் ரூ.78 லட்சம், ஆன்லைன் நுழைவுச்சீட்டு மற்றும் லட்டு விற்பனை மூலம் ரூ.28.52 லட்சம் என இந்த 3 நாட்களில் சாய்பாபா சமிதி நிர்வாகத்துக்கு 5 கோடியே 97 லட்சம் ரூபாய் நன்கொடையாக சேர்ந்ததாக சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையின் தலைமை செயல் அலுவலர் ருபல் அகர்வால் தெரிவித்துள்ளார். #Saibabatemple #Saibabasamadhicentenary
குஜராத்தில் இருந்து மீட்கப்பட்ட தஞ்சை பெரிய கோவில் ராஜராஜ சோழன் சிலைக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
சிதம்பரம்:
தஞ்சை பெரிய கோவிலில் இருந்த ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி ஐம்பொன் சிலைகள் 60 ஆண்டுக்கு முன்பு திருடு போனது. அந்த சிலைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் டி.எஸ்.பி.ராஜாராமன் மற்றும் போலீசார் குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்டனர்.
இதையடுத்து அந்த சிலைகள் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. இந்தநிலையில் மீட்கப்பட்ட ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி ஐம்பொன் சிலைகளுடன் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தனர்.
அங்கு அந்த சிலைகளுக்கு கோவில் தீட்சிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி ஐம்பொன் சிலைகளை தஞ்சை பெரியகோவிலுக்கு போலீசார் கொண்டு சென்றனர்.
முன்னதாக சிலை தடுப்பு பிரிவு கூடுதல் டி.எஸ்.பி.ராஜாராமன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
60 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி ஐம்பொன் சிலைகள் குஜராத் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டது. தஞ்சை பெரிய கோவிலுக்கும், தில்லை நடராஜர் கோவிலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே மீட்கப்பட்ட சிலைகளை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு கொண்டு வந்தோம். இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மீண்டும் அந்த சிலைகளை தஞ்சை பெரிய கோவிலுக்கு எடுத்து செல்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

×

X